கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர
விஜய், தேவதர்ஷினி, ராஜீவ் ஆகியோர் நடிப்பில் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் 'ரகு தாத்தா' படத்தின் கிளிபிம்ஸ் வீடியோவை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் “ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை வயிறு குலுங்க சிரிக்க சிரிக்கவைக்க வருகிறது, ரகு தாத்தா (Raghu Thatha). விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்…” என்று பதிவிட்டுள்ளார். சுமன் கும் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.