திமுக பஞ்சாயத்து தலைவர் காரில் தொப்பி கொடி படங்கள் பறிமுதல்

5058பார்த்தது
தூத்துக்குடி மூன்றாவது மைல் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது அந்த வழியாக வந்த தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணகுமார் காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் திமுக விளம்பரம் பொறித்த பாக்கெட் காலண்டர் 195 , திமுக விளம்பரம் அடங்கிய கீசெயின் 800, தொப்பி 450, திமுக தலைவர் ஸ்டாலின் படம் பொறிக்கபட்ட 500 கீ செயின், 1900 ஸ்டிக்கர் உள்ளிட்ட பொருட்கள் காரில் இருந்தது தெரியவந்தது இதை அடுத்து அந்த பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கார் மற்றும் காரில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்து காரை ஓட்டிவந்த மாப்பிளையூரணியை சேர்ந்த சுரேஸ் பிரபு என்பவர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி