கனிமொழி குறித்து அவதூறு! முன்னாள் பாஜக பிரமுகர் கைது

71பார்த்தது
கனிமொழி குறித்து அவதூறு! முன்னாள் பாஜக பிரமுகர் கைது
தூத்துக்குடியை சேர்ந்த ராஜதுரை (50) முன்னாள் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஆவார். இவர் திமுக எம்.பி கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ ஒன்றை தன் வாட்ஸ்-அப் குழுவில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக ஐடி விங்க் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் தலைமையிலான போலீசார் ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி