நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - எடப்பாடி சவால்

84பார்த்தது
நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - எடப்பாடி சவால்
கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 5) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “அதிமுகவில் உழைப்பாளிகள் அதிகமாக இருக்கின்றனர். நாங்கள் உழைப்பையும், மக்களையும் நம்பியே இருக்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டும். எங்கள் கட்சி தொண்டன் பேச ஆரம்பித்தால் கூட உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?” என்றார்.

தொடர்புடைய செய்தி