2021-22-ல் 61 பாதிப்புகளும், 2022-23-ல் 129 பாதிப்புகளும் பதிவான நிலையில், 2023-24-ஆம் ஆண்டில் 1,091 பாதிப்புகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. சுமார் 40% பாதிப்புகள் 6-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பதிவாகியுள்ளன. இந்த நோய் தடுப்புக்கு மருந்து வழங்கீட்டுத் திட்டத்தின் (UIP) கீழ் தடுப்பூசி வழங்க பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கோரியுள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் 12 நோய்களுக்கு 11 தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.