வெந்தயம் மற்றும் சீரகம் இரண்டையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து இரவில் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். வெந்தயம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். செரிமானக் கோளாறுகளை நீக்கி, மலச்சிக்கலை தீர்க்கும். உடல் உஷ்ணம் குறையும். முடி உதிர்வு கட்டுப்படும். தலை சூடு நீங்கும். கண்களுக்கு குளிர்ச்சி தரும். தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.