சென்னை அண்ணாநகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த டாக்டர் பாலமுருகன் (57), மனைவி சுமதி (47), மகன்கள் ஜஸ்வந்த் குமார்(19), லிங்கேஷ்குமார்(16) கடந்த 13ம் தேதி தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்த போலீசார் விசாரணையில், பாலமுருகன் 5 ஸ்கேன் சென்டர் நடத்தி வந்த நிலையில் தொழிலுக்காக ரூ. 6 கோடி வரை கடன் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தற்கொலைக்கு முன் யாரோ ஒருவர் போன் செய்து நாளைக்கே ரூ.1 கோடி வேண்டும், இல்லையென்றால் நேரில் வந்து அவமான படுத்துவேன் என கூறியதால் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.