விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தனி அடையாள எண் பெறாவிட்டால், மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 நிதியுதவியை பெற முடியாது. இதனால், ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும், உழவர் நலத்துறை அலுவலர்கள் நடத்தும் சிறப்பு முகாம்களில் மார்ச் 31க்குள் நிலத்தின் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து, தனித்துவமான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவும்.