வாய்ப்புண் வருவது சாதாரண விஷயம் என்றாலும் அதை கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்னை பெரிதாகலாம். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம். காரம் அதிகமாக சாப்பிடுபவர்கள், புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், மனஅழுத்தம் அதிகம் கொண்டவர்களுக்கும் அடிக்கடி வரலாம்.