ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே உரையாற்றினார். மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் குறித்து பேசுகையில், "இது பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பூமி. அவர் தனது வாழ்வியலை அறிவியல் மற்றும் ஆன்மீகத்துக்காக அர்ப்பணித்தார். 1000 ஆண்டுகள் பழமையான நகரத்தில் புதிய பாம்பன் பாலம் 21ம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தின் மைல் கல்லாக அமைந்துள்ளது" என பேசினார்.