திருவிடைமருதூர் - Thiruvidaimarudur

ஆடுதுறை: வன்னியர் சங்க தலைவர் பு. தா. அருள்மொழி பரபரப்பு பேட்டி

ஆடுதுறையில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு. தா. அருள்மொழி பேட்டியளித்தார். வன்னியர் சங்கத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கிராமம் தோறும் சென்று மக்களுக்கு விளக்கி சங்கத்தில் இணைத்து போராட அழைக்கும் வகையில் விரிவான சுற்றுப்பயணத்தை நாங்கள் செய்ய இருக்கிறோம். அதன் பிறகு எங்களுக்கு சேர வேண்டிய உரிமைகளையும் அரசு செய்ய தவறிய காரியங்களையும் பெறுவதற்கு இளைஞர்கள் மூலமாக நிர்பந்தத்தை இந்த அரசுக்கு கொண்டு வருவோம். டிசம்பர் மாதத்திற்குள்ளாக இந்த ஆயத்த நடவடிக்கைகளை செய்த பிறகு ஜனவரி மாதத்தில் வன்னியர் சங்கத்தின் போராட்டத்தை டாக்டர் ஐயா அவர்கள் அறிவிப்பார்கள்.  வருகிற டிசம்பர் 21ஆம் நாள் தமிழகத்தில் இருக்கிற விவசாயிகளுடைய கோரிக்கைகளை வைத்து திருவண்ணாமலையில் பெரிய மாநாடு ஆலயமணி தலைமையில் நடைபெறுகிறது. குறைந்தது 2 இலட்சம் பேர் விவசாயிகளை அழைத்து வருவது என்று முடிவு செய்துள்ளோம். சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநாடு நிச்சயமாக இந்த ஆண்டு நடைபெறும். மகாபலிபுரத்தில் நடத்தத்தான் நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். காவல்துறை அனுமதி கொடுக்காவிட்டாலும் அங்கு நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். திமுக ஆட்சி எங்களுக்கு மட்டுமல்லாமல் இங்கு இருக்கிற தமிழர்களுக்கெல்லாம் விரோதமான ஆட்சி. இவர்கள் மீது கோபித்துக் கொண்டு தமிழ் அன்னையே இந்த நாட்டை விட்டு போய்விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా