பூந்தாழங்குடியில் நிறைவடைந்த பிரச்சாரம்

569பார்த்தது
பூந்தாழங்குடியில் நிறைவடைந்த பிரச்சாரம்
*பூந்தாழங்குடி ஊராட்சியில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணியின் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை. செல்வராஜ் போட்டியிடுகிறார் இதனையடுத்து கடந்த சில தினங்களாக முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வந்த நிலையில் இன்று பூந்தாழங்குடி பகுதி கிராம மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் திரண்டு கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் முன்னதாக பூந்தாழங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலமணலி, பூந்தாழங்குடிகடைத்தெரு, ஈழங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று மேளதாளங்கள் முழங்க துண்டு பிரசுரம் வழங்கி கதிர்அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஊராட்சி மன்றதுணை தலைவர் திமுக கிளை வார்டு செயலாளர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்தி