இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்த ஒரு மாத பிஞ்சுக் குழந்தைக்கு இரும்பு கம்பியை பழுக்கக் காய்ச்சி சூடு வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 40 முறை உடலில் சூடு வைத்த நிலையில், குழந்தைக்கு தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 10 நாட்களாக காயச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, சூடு வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்படி செய்தால் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையால் பெற்றோர் இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.