சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்வதற்கான உத்தரவை ரத்து செய்யுமாறு சிவாஜியின் மூத்த மகன் ராம் குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், ஜப்தி உத்தரவுக்கு உள்ளான வீட்டில் தனக்கு பங்கு இல்லை என்றும், அந்த வீடு தனது சகோதரர் பிரபுவுக்கு சொந்தமானது என்றும் ராம் குமார் தரப்பு தெரிவித்தது. இதைக் கேட்ட நீதிமன்றம் கடன் பிரச்னையில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.