100 நாள் வேலை கட்டும் கோரிக்கை மனு

69பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பழையங்குடி ஊராட்சியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டம் வழங்க கோரி 500 க்கும் மேற்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்ட நூறு நாள் பணியாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் குருவை சாகுபடி இல்லாமல் வேலை இழந்து தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வேண்டும்
வேலை கொடுக்க முடியவில்லை என்றால் சட்டப்படி நிவாரண கொடு என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தினார்கள். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய மோடி அரசின் 100 நாள் வேலை நாட்கள் படிப்படியாக குறைந்து தற்போது முழுமையாக வேலை இல்லாத நிலை உருவாகி உள்ளது கண்டித்தும் கையில் மனுக்கள் ஏந்தியபடி மோடி அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஜெயபால் மனுவினை ஊராட்சி மன்ற செயலாளர் பிரியங்கா ஊராட்சி மன்ற தலைவர் கோகிலம் சங்கர் வழங்கினர். நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ எஸ் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ரங்கசாமி மற்றும் தமிழ் மாநில விவசாய சங்க மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பல கலந்துகொண்டு 100 வேலை கேட்டு மனுக்கள் வழங்கினர்.
Where: திருத்துறைப்பூண்டி
Additional info: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பழையங்குடி ஊராட்சியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டம் வழங்க கோரி 500 க்கும் மேற்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்ட நூறு நாள் பணியாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் குருவை சாகுபடி இல்லாமல் வேலை இழந்து தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வேண்டும்
வேலை கொடுக்க முடியவில்லை என்றால் சட்டப்படி நிவாரண கொடு என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தினார்கள். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய மோடி அரசின் 100 நாள் வேலை நாட்கள் படிப்படியாக குறைந்து தற்போது முழுமையாக வேலை இல்லாத நிலை உருவாகி உள்ளது கண்டித்தும் கையில் மனுக்கள் ஏந்தியபடி மோடி அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஜெயபால் மனுவினை ஊராட்சி மன்ற செயலாளர் பிரியங்கா ஊராட்சி மன்ற தலைவர் கோகிலம் சங்கர் வழங்கினர். நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ எஸ் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ரங்கசாமி மற்றும் தமிழ் மாநில விவசாய சங்க மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பல கலந்துகொண்டு 100 வேலை கேட்டு மனுக்கள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி