நன்னிலத்தில் விட்டு விட்டு பெய்யும் மழை

84பார்த்தது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்திலும் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. இன்று இரண்டாவது நாளாக நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களும் பாடசாலைகளும் வாகன ஓட்டிகளும் மாணவ மாணவியரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

தாழ்வான பகுதிகளில் வயல்வெளிகளில் தேங்கிய நீரால் பயிரிடப்பட்ட பருத்தி பயிர்வகைகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இரண்டாவது நாள் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி