தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் சாதம் வடித்த கஞ்சி சேர்த்து அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். மறுபுறம் 4 டேபிள் ஸ்பூன் பச்சைப்பயறு மற்றும் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து அதை தேங்காய் பாலுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த ஹேர் பேக்கை முடியின் வேர்க்கால்களில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் குளிக்கலாம். வாரம் இரு முறை என இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்தி வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.