உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தனது 7 வயது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். நள்ளிரவில் தனது மனைவியுடன் படுத்திருந்த மகளை, தனது அறைக்கு தூக்கிச்சென்று பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண், தனது குழந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்துவிட்டதாக நாடகமாடினார். சந்தேகமடைந்த போலீசார் விசாரித்தபோது இந்த தகவல் வெளியாகியுள்ளது.