உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நவதானிய சுண்டலை ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம். சிவப்பு மற்றும் பச்சை பட்டாணி, வெள்ளை சுண்டல், பச்சைப் பயிறு, காராமணி, தட்டைப்பயிறு, அவரை, கொள்ளு, ராஜ்மா ஆகியவற்றை ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். கடாய் சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி ,வேக வைத்துள்ள கடலை கலவை, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் நவதானிய சுண்டல் தயார்.