ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலய மகா கும்பாபிஷேகம்

74பார்த்தது
ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் கம்பசேவை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அருவிழிமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் மற்றும் கம்பத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அன்னதான படையல் நடைபெற்றது. இவ்ஆலயத்தில் 118 வருடங்களாக கம்ப சேவை விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு இரண்டு கால யாக பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்று இரண்டாம் காலையாக பூஜையில் பட்டு வஸ்திரங்கள் சாத்தப்பட்டு நிறைவு மகாபூர்ணாகஹுதியுடன் தீபாரதனை நடைபெற்றது. அதன் பிறகு புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது அதன் பிறகு விமான கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று கம்ப சேவை எனும் கம்பத்திற்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்து ஸ்ரீ வெங்கடாஜலபதி சாமிக்கு தாலிகை பரப்புதல் என்னும் அன்னதான படையல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு வீபூதி குங்கும பிரசாத பைகளும் அன்னதான பிரசாதங்களும் வழங்கி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி