நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி

73பார்த்தது
நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதிகளான சித்தமல்லி, பரப்பனாமேடு, சம்பாவெளி, காளாஞ்சிமேடு பகுதிகளில் சாலைகளில் உள்ள புளிய மரங்கள் பழுத்து ஒவ்வொன்றாக சாலைகளில் கொட்டுகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களிடம் ஊராட்சி சார்பில் அந்த புளிய மரங்களை ஏலம் எடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து எடுத்துக் கொள்வது வழக்கம். இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீடாமங்கலத்திலிருந்து தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் சித்தமல்லி பகுதியில் உள்ள புளிய மரங்களில் உள்ள புளியம் பழங்கள் அறுவடை பணியை அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்த்து ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி