கடந்த காலங்களில் ஆளுநர் ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது, ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளை பொன்முடி புறக்கணித்து வந்ததோடு
உயர்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து ஆளுநர் விமர்சித்து வந்தார். இந்நிலையில் ஆளுநருடன் மோதல் போக்கு கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.