குரு பகவான் ஆலய மகா கும்பாபிஷேகம்- கழுகு பார்வையில்

79பார்த்தது
ஆலங்குடி குருபகவான் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.


நவக்கிரங்களில் சுப கிரஹமான குருபகவான் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஆலங்குடி குருபரிகார ஸ்தலமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க. திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலின்மகாகும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பா க நடைப்பெற்றது.
இந்த கும்பாபிஷேகவிழா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கால யாகபூஜையுடன் துவங்கி நடைப்பெற்று வந்தது.
இன்று அதிகாலை 6ஆம் கால யாகபூஜைகள் நடைப்பெற்று யாக குண்டத்தில் பட்டு வஸ்திரங்கல் செலுத்தி நிறைவு மஹாபூர்ணாஹூதி நடைபெற்றது. அதன் பிறகு மஹாதீபாராதனை நடைப்பெற்றது.
அதன் பின்னர் சிவ கன வாத்தியங்கள் முழங்க மல்லாரி இசையுடன் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை வலம் வந்து சுவாமி, அம்பாள், இராஜகோபுரம் , வினாயகர், சுப்ரமணியர் போன்ற பரிவார விமான கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகவிழாவை பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி