மீனவர்கள் போல் விவசாயிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

80பார்த்தது
ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக காவிரி தண்ணீர் திறந்து விடாத நிலையிலும் பருவம் தவறி பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிருக்கு நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படாத நிலையிலும் திருவாரூர் மாவட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இந்த காலங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மீன் பிடி தடை காலங்களில், மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை போல விவசாயிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களாலும் பருவம் தவறி பெய்யும் மழையினால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாலும், குறித்த நேரத்தில் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இதனால் அரசு மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது போல விவசாயிகளுக்கும் உதவித்தொகை வழங்கு வேண்டும் என தமிழக விவசாயிகள் நல சங்கத்தின் செயலாளர் ராமமூர்த்தி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி