திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் மாணவிகள் தங்குவதற்கு விடுதி உள்ளது. இங்கு வசிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக குழந்தைகள் நல வாரியத்திற்கு புகார் வந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தலைமையாசிரியர் சகாயராணியின் மகனான டாக்டர் சாம்சன் அடிக்கடி அங்கு வந்து சிறுமிகளிடம் அத்துமீறியிருக்கிறார். இதற்கு தாயும் உடந்தையாக இருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.