தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. முட்டைகோஸ், கீரைகள், முழு தானியங்கள், சால்மன் மீன், வால்நட் மற்றும் அக்ரூட் பருப்புகள், பீன்ஸ், பூண்டு ஆகியவை இதயத்தை பலமாக்கும். தினசரி 30 நிமிடம் நடைப்பயிற்சி மற்றும் சரியான உடற்பயிற்சி இதய நலத்தை காக்க உதவும். மன அழுத்தம் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் வாழ பழக வேண்டியது முக்கியம். உடல் எடையை சரியாக பராமரித்து வருவது சிறந்தது.