நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை

83பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 35000 ஏக்கர் அளவிற்கு ஆழ்குழாய் கிணறு மற்றும் பம்பு செட் உள்ள விவசாயிகளால் நேரடி விதைப்பு மற்றும் நடவு மூலமாக செய்யப் பட்டுள்ளது.
இந்த நிலையில் பருவம் தவறி பெய்த கனமழையினால் கோடை சாகுபடி செய்த நெல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு நிவாரண வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதுவரை நிவாரணம் வழங்கப்படாத நிலையில். தற்பொழுது பல இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது.
அறுவடை செய்த நெற் பயிரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்லும் நிலையில். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சில இடங்களில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
இதனால். நெல் மூட்டைகளோடு விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும். அங்கு அடுக்கி வைத்திருக்கும் நெல் மூட்டைகளை இரவு பகலாக பாதுகாப்பதற்கு சிரமம் ஏற்படுவதாகவும்.
திடீர் மழை மற்றும் கால்நடைகளிடமிருந்து நெல் முட்டைகளை பாதுகாக்க சிரமாக உள்ளது எனவும்.
தேவைப்படும் இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என விவசாயிகள் அரசு கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி