தனியார் கான்கிரீட் கலவை நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு

81பார்த்தது
குடவாசல் அருகே அரசவனங்காடு கிராமத்தின் கும்பகோணம் திருவாரூர் நெடுஞ்சாலையில் தனியார் கான்கிரீட் கலவை மையம் ஒன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. எம் சாண்ட் சிமெண்ட் ஜல்லி முதலானவற்றை கலந்து கான்கிரீட் கலவை தயாரித்து பல்வேறு அரசு பணிகளுக்கும் பல்வேறு தனியார் பணிகளுக்கும் கான்கிரீட் கலவை அனுப்பப்படுகிறது.
இந்த கான்கிரீட் கலவை தயார் செய்வதற்கு தேவையான தண்ணீர் கான்கிரீட் கலவை தயாரிக்கும் இடத்துக்கு அருகே பெரிய ஆழ்குழாய் கிணறு போடப்பட்டு எடுக்கப்படுகிறது. நாள் ஒனறுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கான்கிரீட் கலவை தயாரிக்கும் பொழுது வெளிப்படும் தூசிகளால் குடியிருப்புகளில் தூசிகள் படிந்து வீட்டில் உள்ள பொருட்களும் வீணாகுவதாகவும் தூசுகள் காற்றின் மூலம் மூக்கு வாய் வழியாக உடலுக்குள் செல்வதால் பெரியவர்கள் குழந்தைகள் என பெரும்பாலானோர் சுவாச பிரச்சனைகளுக்கு ஆளாகுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இந்த கான்கிரீட் கலவை மையத்தை குடியிருப்பு பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என கூறி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அரசவனங்காடு பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி