குருப் பெயா்ச்சி லட்சாா்ச்சனை நிறைவு

56பார்த்தது
குருப் பெயா்ச்சி லட்சாா்ச்சனை நிறைவு
நவகிரக தலங்களில் குரு பரிகாரத் தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சியையொட்டி நடைபெற்ற லட்சாா்ச்சனை விழா நிறைவடைந்தது.

குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கும்போது, இக்கோயிலில் குருப் பெயா்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, மே 1-ஆம் தேதி குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயா்ச்சி அடைந்ததையொட்டி, அன்றையதினம் இக்கோயிலில் குருப் பெயா்ச்சி விழா நடைபெற்றது.

முன்னதாக, முதல்கட்ட லட்சாா்ச்சனை ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடா்ந்து, குருப் பெயா்சிக்குப் பின்னா், இரண்டாம் கட்ட லட்சாா்ச்சனை மே 6 -ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (மே 12) வரை நடைபெற்றது.

இதில், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்கள் பங்கேற்று பரிகாரம் செய்து வழிபட்டனா். இவா்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியிலான 2 கிராம் டாலா் பிரசாதமாக வழங்கப்பட்டது.

லட்சாா்ச்சனை நிறைவு நாளில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடர்புடைய செய்தி