பால ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி வீதி உலா

60பார்த்தது
மன்னார்குடி கீழ ராஜ வீதியில் உள்ள பால ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பாலா ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளினார். வானகார தெரு, சேனியர் தெரு, சின்னக் கடை வீதி வழியாக உலா நடைபெற்றது. வழி நெடுகிலும் பக்தர்கள் ஆஞ்சநேய சுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 48 நாட்கள் நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி