விற்பனையாகாத விநாயகர் சிலைகளால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை.

74பார்த்தது
விற்பனையாகாத விநாயகர் சிலைகளால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை.
மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக மண்பாண்டங்கள் செய்து விற்பனை செய்து வந்தனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கடந்த 10 ஆண்டுகளாக இங்குள்ள குயவர்கள் தங்களது கை வண்ணத்தில் பலவிதமான விநாயகர் சிலைகளை அழகுற வடிவமைத்து விற்பனை செய்தனர். கடந்த ஆண்டுகளில் இவர்கள் தயாரித்த விநாயகர் சிலைகளின் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. இதனால் இப்பகுதி மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கணிசமான லாபம் கிடைத்தது
தற்போது மண்பாண்ட தொழிலும் நழிவடைந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை நம்பி கடந்த இரண்டு மாதங்களாக முற்றிலும் ரசாயனமின்றி களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை செய்து வந்தனர்.

வரும் 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்னும் இரண்டு நாட்களே உள்ளது இருந்த போதும் இப்பகுதி குயவர்கள் தயாரித்த விநாயகர் சிலைகள் பெரும்பாலானவை தற்போது வரை விற்பனையாகாமல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விநாயகர் சிலை செய்ய ஆனால் செலவுகள் மற்றும் உடல் உழைப்பு வீணாவதாகவும் இப்பகுதி குயவர்கள் வருத்தம் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் ரசாயன கலவை கொண்டு நவீன முறையில் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்யப்படுவதும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி