மன்னர்குடியில் 40ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்

61பார்த்தது
மன்னார்குடி கருமாரியம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள பழமையான கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று முடிந்தது இந்நிலையில் நேற்று முன்தின முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும் அதனைத் தொடர்ந்து மகாபூரண ஆஹூதி நடைபெற்றது புனித நீர் உள்ளகுடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் கருமாரி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி