மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல நாட்களாகவே அளவுக்குஅதிகமாக பனிப்பொழிந்து வருகிறது. இன்று காலை மன்னார்குடியில் 7: 45வரை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. வயதானவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கடும்குளிரால் பாதிக்கப்படுகின்றனர் சாலைகள் முழுவதும் வெண் போர்வை போர்த்தியது போல் காணப்படுகிறது வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன கடும்குளிரால் வேலைக்கு செல்போர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.