மன்னார்குடியில் நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

84பார்த்தது
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து மன்னார்குடி பின்லே பள்ளி மைதானத்தில் வேலை நிறுத்த போராட்டம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கேசவன், மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட கெளரவ தலைவர் க. மலர்வேந்தன் பங்கேற்று நியாயவிலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளை குறித்து விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில் நிர்வாகிகள் அண்ணாதுரை, கதிரவன், வேல் வண்ணன் ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அரிசி, கோதுமை, பாமாயில், துவரம்பருப்பு போன்ற குடிமை பொருட்களின் இருப்பு குறைவாகவோ அதிகமாகவோ அல்லது போலிபில் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பணியாளரிடம் நடைமுறையில் இருந்து வந்த அபராத தொகை விட இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதை பணியாளர் நலன் கருதி திரும்ப பெற வேண்டும். காலாவதியான பொருட்களை திரும்ப எடுத்துக் கொள்வதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களே அதற்கான தொகையினை திரும்பசெலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது. நியாயவிலை கடை பணியாளர்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே அவர்களை பணியமர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி