பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகரும், அரசியல்வாதியுமான முகேஷ் எம்எல்ஏ, திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நேற்று (அக்., 21) இரவு வடக்கஞ்சேரி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட பின்னர் அவரது கைது பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2011ஆம் ஆண்டு படப்பிடிப்பின் போது ஹோட்டலில் தங்கியிருந்த முகேஷ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.