மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு நேற்று (அக்., 21) பாலாலயம் நடைபெற்றது. காலை விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாகபூஜை, த்ரவ்யாஹுதி, மஹாபூர்ணாஹுதியை தொடர்ந்து மஹாதீபாராதனை, யாத்ராதானத்துடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர சுவாமி திருக்கோயில் கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு பாலாலயம் விமரிசையாக நடைபெற்றது.