பருத்திச் செடிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

79பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடியில் சுமார் 50, 000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையை தொடர்ந்து பருத்திச் செடிகள் சத்துருதி பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நன்னிலம் பூந்தோட்டம், செருவலூர், தென்குடி, முடிக்கொண்டான், நெம்மேலி, மருதுவஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சத்துருதி பூச்சுகளால் பருத்தி செடியில் உள்ள இலைகளில் பூச்சி அறித்தும், பருத்தி காய்கள் வளர விடாமல் தடுப்பதாலும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் பருத்தி செடிகளுக்கு பூச்சி தாக்குதல் மருந்து அடிப்பதற்கும் வேலை ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளதால் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயி நிஜாம் கூறுகையில் மழையினால் பருத்தி செடியில் சத்துருதி பூச்சு தாக்குதலால் பருத்தி செடி மகசூல் இழப்பு ஏற்படுகிறது. மருந்து தெளிப்பதற்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதினால் மருந்து செலவு குறைவாக உள்ளது. அதேபோல ஒரு ஏக்கருக்கு 2 மணி நேரத்தில் அடிக்கும் மருந்தினை 15 நிமிடத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க முடிகிறது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி