திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அந்த வகையில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக இளைஞர் அணி அலுவலகத்தை ஜேசிபி மூலம் அதிகாரிகள் அகற்றினர்.
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தவெக அலுவலகம் கட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. அலுவலகத்தை ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டபோது அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு காணப்பட்டது.