கர்நாடகா: மைசூரு பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோபி அந்தோணியும், அவரது மனைவி சர்மிளாவும் சுமார் ரூ.80 லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் அவர்கள் பெரும் தொகையை இழந்துள்ளனர். இதையடுத்து, ஜோபி - சர்மிளா தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.