ராஜகணபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

85பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வள்ளியம்மாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

விக்னேஸ்வர பூஜை. கணபதி ஓமம். நவகிரக ஹோமம். தம்பதி பூஜை. கன்யா பூஜை. வரு பூஜை கோ பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று முதல் கால பூஜை விசேஷ சாந்தி பிரவேச பலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று காலை கோவில் வளாகத்தில் கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள் எஸ். ஜெயவேலு பி. ஜே. மூர்த்தி எஸ். கே. குமார் எஸ் புண்ணியகோட்டி ஜி. ராஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி