ஏரி தற்போது தனி நபர்கள் ஆக்கிரமிப்பு

68பார்த்தது
ஏரி தற்போது தனி நபர்கள் ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி அருகே உள்ள சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை இங்கு உள்ள பொன் பாடி ஏரி உள்ளது 200 ஏக்கருக்கு மேல் பரப்பளவில் உள்ள இந்த ஏரி தற்போது தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்யும் இடமாகவும் மேலும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகளாகவும் மாற்றி வரும் சூழ்நிலையில் இந்த ஏரி பகுதியில் நடைபெற்று வருகிறது. ஏரி கரையை பல இடங்களில் ஏரியின் பின்புறம் சேதப்படுத்தி தனி நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர்
இப்படி இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் ஏரி ஆக்கிரமிப்பு காரணமாக இன்னும் சிறிது காலத்தில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் காரணம் ஏரி பாசனத்தை நம்பி விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும் மேலும் இந்த ஏரியில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்த அளவு ஏற்படும் சூழ்நிலையை ஆக்கரைப்பாளர்கள் ஏற்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர் விவசாயிகள்
இதனால் ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் ஏரி ஆக்கிரமிப்பு செய்து வருபவர்கள் மிகப்பெரிய அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்பதால் விவசாயிகள் வெளிப்படையாக கூறுவதற்கு அச்சம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி