சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளிக்கு மரண தண்டனை

79பார்த்தது
சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளிக்கு மரண தண்டனை
மேற்கு வங்கம்: முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த அக்.13ஆம் தேதி சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனபந்து ஹல்தர், சுபோஜித் ஹல்தர் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், சிறுமிக்கு பூ வாங்கி கொடுத்து, ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளி தீனபந்துவுக்கு மரண தண்டனையும், துணைபோன சுபோஜித்துக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி