கோமாரி நோய்: கால்நடை பராமரிப்புத் துறை தகவல்

77பார்த்தது
கோமாரி நோய்க்கான இலவச தடுப்பூசி முகாம் வருகிற 16ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக தமிழக கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது. கோமாரி நோய் ஒரு நச்சுயிரினால் ஏற்படுகிறது. இது கால்நடை வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாகும். 4 மாத வயதுக்கு மேல் உள்ள அனைத்து பசு, எருமை இன மாடுகளுக்கு தடுப்பூசி வரும் 16ஆம் தேதி முதல் இலவசமாக செலுத்தப்படும். இது தொடர்பாக விபரம் அறிய அருகில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது மருத்துவமனையை அணுகவும்.

தொடர்புடைய செய்தி