ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே முனியப்ப நாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் அரிகிருஷ்ணன் (32) இவர் ஆவடியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை வீட்டிலிருந்து ஆவடிக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆற்காடுகுப்பம் பகுதியில் சென்ற போது சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி அதி வேகமாக சென்ற தமிழ்நாடு அரசு சுற்றுலா பேருந்து பைக் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார் இறந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த அரிகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.