திருத்தணி முருகப்பெருமான் தேர் பவனி- பக்தர்கள் பங்கேற்பு

69பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற உள்ள உற்சவ விழாவில் தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காலை மற்றும் மாலையில் உற்சவர் மலைக்கோவில் மாடவீதியில் வாகன சேவைகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். உற்சவ விழாவில் 7ம் நாளான இன்று இரவு முருகப் பெருமான் தேர் பவனி நடைபெற்றது. வள்ளி , தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். கோவில் அர்ச்சகர்கள் தீபாராதனை தொடர்ந்து பக்தர்கள் அரோகரா பக்தி முழக்கங்களுடன் தேர் பவனி தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கோயில் மாட வீதியில் உலா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி