10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்

53பார்த்தது
10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்
குஜராத்தின் வதோதரா மக்களவை தொகுதி வேட்பாளராக ஹேமங் ஜோஷி (வயது 33) என்பவரை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளது. குஜராத்தின் பா.ஜ.க.வுக்கான மிக இளம் வேட்பாளர் என்ற பெருமையை ஹேமங் பெற்றுள்ளார். இந்நிலையில், ஹேமங் செய்தியாளர்களிடம் பேசும்போது, குஜராத்தின் பா.ஜ.க. தலைவர் சி.ஆர். பாட்டீல் எனக்கு இலக்கு ஒன்றை நிர்ணயித்து இருக்கிறார். பிற தொகுதிகளுக்கு வெற்றி வித்தியாசம் 5 லட்சம் வாக்குகள் என நிர்ணயித்தபோதும், வதோதரா மக்களவை தொகுதியில் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறார். அதற்காக நான் கடுமையான முயற்சியை மேற்கொள்வேன்.

தொடர்புடைய செய்தி