இடி மின்னலுடன் இந்த இடங்களில் மழை பெய்யும்

19373பார்த்தது
இடி மின்னலுடன் இந்த இடங்களில் மழை பெய்யும்
தமிழகத்தில் ஒரு வாரமாக ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, இன்று (ஏப்ரல் 21) தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடி மின்னல் சமயங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி