ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

85பார்த்தது
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கிர்கிஸ்தானில் நடக்கும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதி போட்டியில் கஜகஸ்தானின் லாராவை வினேஷ் போகத் வீழ்த்தியதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.ஜூலை 26-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், ஒலிம்பிக் போட்டி துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 29 வயதான வினேஷ் போகத் இதன்மூலம், ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று இறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்தப் போட்டிக்கான 50 கிலோ எடை பிரிவில் தனக்கான இடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி