சாலையில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் பொதுமக்கள் அவதி

51பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக மா. பொ. சி சாலையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

அவ்வழியில் திருத்தணி ரயில் நிலையம், காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லக்கூடிய முக்கிய சாலை என்பதால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையில் நடந்து வரும் பொதுமக்கள் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் துர்நாற்றம் வீசுவதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாகம் தேங்கி நிற்கும் கழிவு நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அதேபோல் அடிக்கடி மழைக்காலங்களில் அப்பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்காமல் நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி