100 நாள் பணி வழங்கவில்லை என சாலை மறியல் போராட்டம்

50பார்த்தது
திருத்தணி அருகே என். என். கண்டிகை ஊராட்சியில் 100 நாள் பணி வழங்கவில்லை என்று அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபடும் பெண்கள்




திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் என். என். கண்டிகை ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கடந்த இரண்டு மாதத்துக்கு மேலாக 100 நாள் பணி வழங்கவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து 100 நாள் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து
என். என். கண்டிகை ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி அருகில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் பெண்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெண்கள் சாலை மறியலில் ஈடுபடுவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபடும் பெண்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்

கண்டிப்பாக 100 நாள் பணி வழங்க வேண்டும் என்று இவர்கள் முடக்கமிட்டு சாலை மறியலில் செய்து வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி